சினிமா செய்திகள்

ஒரு பாட்டில் காப்பித்தூளுக்காக அடித்து கொள்ளும் வனிதா-அபிராமி: பரபரப்பு வீடியோ!

Published

on

ஒரே ஒரு பாட்டில் காப்பித்தூள் பாட்டிலுக்காக அபிராமி மற்றும் வனிதா அடித்துக் கொள்ளும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளே தனக்கு காபி பொடி வரவில்லை என பிக்பாஸ் குழுவினர்களிடம் சண்டை போட்டார் வனிதா. அதன் பின்னர் சமீபத்தில் நடந்த டாஸ்க்கில் வனிதா டீம் ஜெயித்ததால், பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்காக காபி பொடி அனுப்பப்பட்டது.

ஆனால் அந்த காபி பொடியை தன்னுடைய பொறுப்பில் எடுத்து வைத்துக் கொண்ட வனிதா, எனக்கு போக மிச்சம் மீதி இருந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு கொடுப்பேன் என்றும், ரெகுலராக டீ குடிப்பவர்களுக்கு காப்பி கிடையாது என்றும் கூறுகிறா.ர்

இதனால் ஆத்திரமடைந்த அபிராமி, இது உங்களுடைய சொந்த பொருளில்லை, பிக் பாஸ் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தான் அனுப்பி வைத்துள்ளார். எனவே நீங்கள் எடுத்துக் கொள்வது சரி இல்லை என்று வாதாடுகிறார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் வனிதா நாங்கள் டாஸ்க் ஜெயித்த தால்தான் இந்த காப்பி பொடி வந்துள்ளது என்றும் அதனால் இதை யாருக்கும் தர மாட்டேன் என்றும் கூறுகிறார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகமானதால் ஆத்திரமடைந்த வனிதா, காபித்தூள் பாட்டிலை தூக்கி எறிந்துவிட்டு எனக்கு காப்பியே வேண்டாம் என்று கூறிவிட்டு செல்கிறார். இதனால் அபிராமி உள்பட பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் அந்த வீடியோ முடிவுக்கு வருகிறது.

https://twitter.com/disneyplusHSTam/status/1489116516394344448

seithichurul

Trending

Exit mobile version