சினிமா செய்திகள்

என்னை வச்சு நிறைய பேர் சம்பாதிக்குறாங்க, நல்லா இருக்கட்டும்: வாணிபோஜன்

Published

on

என்னை வைத்து நிறைய பேர் சம்பாதிக்கிறார்கள் என்றும் அவர்கள் நன்றாக இருக்கட்டும் என்றும் வாணிபோஜன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொலைக்காட்சி தொடர்களில் மூலம் புகழ் பெற்ற நடிகை வாணி போஜன் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த வாணிபோஜன் தற்போது 7 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

சமீபத்தில் வெளியான ’மகான்’ திரைப்படத்தில் வாணிபோஜன்நடித்திருந்தாலும் அவரது காட்சி நீக்கப்பட்டது அவருக்குப்பின் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் நடிகை வாணி போஜன் நடிகர் வைபவ்வை காதலிப்பதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் என்றும் கிசுகிசுக்கள் இணையதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகிறது .

இது குறித்து கூறிய வாணிபோஜன் கூறியபோது, ‘என்னை வைத்து கிசுகிசு எழுதுபவர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்றும் அவர்கள் நன்றாக இருக்கட்டும் என்றும் கூறியுள்ளார் .

இந்த கிசுகிசுக்களுக்கு எல்லாம் ஆரம்பத்தில் நான் வருத்தப்பட்டேன் என்றும் ஆனால் தற்போது அதை பார்த்து நான் கடந்து விடுவேன் என்றும் என்னுடைய குடும்பத்தாரிடமும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறி விட்டதாகவும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version