சினிமா செய்திகள்

விக்ரம் அடுத்த படத்தில் இணைந்த பிரபல சீரியல் நடிகை!

Published

on

விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல சீரியல் நடிகை இணைந்துள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் நடிப்பில் உருவாக இருக்கும் ’விக்ரம் 60’ என்ற திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். செவன்ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தெய்வமகள் உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் தமிழில் ’ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் வாணிபோஜன் இணைந்துள்ளதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே இவர் தமிழில் நான்கு திரைப்படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் என்பதும், அவர் இந்த படத்திற்காக மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படத்தில் நடிகர் பாபி சிம்ஹா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version