சினிமா செய்திகள்

வாங்க மச்சான் வாங்க வீடியோ பாடல் ரிலீஸ்!

Published

on

சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்ட பழைய ஹிட் பாடலான வாங்க மச்சான் வாங்க பாடல் வீடியோவை லைகா வெளியிட்டுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவான வாங்க மச்சான் வாங்க பாடல் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாடல்களின் உரிமையை பெற்ற சரிகமா தமிழ் நிறுவனம் தனது யூடியூப் சேனலில் பாடலை ரிலீஸ் செய்துள்ளது.

Trending

Exit mobile version