சினிமா செய்திகள்

வாங்க மச்சான் வாங்க பாடல் லிரிக் வீடியோ ரிலீஸ்!

Published

on

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் இடம்பெற்றுள்ள வாங்க மச்சான் வாங்க பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

ஹிப் ஹாப் ஆதியின் இசையில், உருவாகியிருக்கும் இந்த ரீமேக் பாடலில், வந்தா ராஜாவாதான் வருவேன் என படத்தின் டைட்டிலும், மேலும், சிம்புவை மன்மதன், வல்லவனன் கெட்டவன் ஆனா நல்லவன் என புகழும்படியாகவே பாடல் அமைந்துள்ளது.

அண்டாவில் பாலாபிஷேகம் கேட்டு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சிம்பு மீது பால் முகவோர்கள் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இன்று மாலை வெளியான இந்த பாடலுக்கு சிம்பு ரசிகர்கள் வரவேற்பை தந்து வருகின்றனர்.

வரும் பிப்ரவரி 1ம் தேதி வந்தா ராஜாவாதான் வருவேன் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version