தமிழ்நாடு

கமல்ஹாசனுக்கு பழக்கூடை அனுப்பி வாழ்த்து கூறிய வானதி ஸ்ரீனிவாசன்

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணி, நாம் தமிழர் கூட்டணி ஆகியவை களத்தில் உள்ளன.

இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் முதல் முதலாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கடந்த சில நாட்களாக கோவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை நடைபயிற்சி செய்து கொண்டே கமல்ஹாசன் வாக்கு சேகரித்து கொண்டிருந்தபோது திடீரென அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார். அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு காயம் என்பதை அறிந்த கோவை பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் கமல்ஹாசனுக்கு பழக்கூடை அனுப்பி விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமலஹாசன் கட்சியின் டாக்டர் மகேந்திரன் அவர்கள் கூறியபோது சகோதரி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைவர் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார், விரைவில் அவரது வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்து பழக்கூடை அனுப்புவார் என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version