தமிழ்நாடு

‘வலிமை’ அப்டேட் குறித்து டுவிட் செய்த வானதி ஸ்ரீனிவாசன்!

Published

on

‘வலிமை’ அப்டேட் குறித்து பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட்dai அஜித் ரசிகர்கள் முதல்வர் முதல் பிரதமர் வரை அனைவரிடமும் கேட்டதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் அஜித், தனது ரசிகர்களை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அதன் பின்னரும் ‘வலிமை’ அப்டேட்டை தொடர்ச்சியாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது. இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த பாஜக நிர்வாகிகளுக்கு நன்றி என தெரிவித்துள்ள வானதி சீனிவாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்தார். இந்த டுவிட்டில் கமெண்ட் செய்த அஜித் ரசிகர் ஒருவர், ‘வலிமை’ அப்டேட் எப்போது? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள வானதி சீனிவாசன், ‘நான் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக வலிமை வட அப்டேட் கிடைக்கும் தம்பி’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version