தமிழ்நாடு

ரேஷன் கடைக்கு ஆய்வுக்குச் சென்று பல்பு வாங்கிய வானதி சீனிவாசன்!

Published

on

கோவை பகுதியில் ரேஷனில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு திடீர் புகார் ஒன்று வந்துள்ளதாம். இது குறித்து விசாரித்த சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்குச் சென்றாராம் வானதி சீனிவாசன்.

அவர் வெறுமனே தனி ஆளாக செல்லாமல், ஊடகங்களையும், பத்திரிகையாளர்களையும் அங்கு வரவழைத்துள்ளார் எனத் தகவல். ரேஷன் கடை ஊழியர்களிடம், ஊடகத்தினர் முன்னாலேயே வானதி சீனிவாசன், ‘ஏன் இப்படி தரமற்ற அரிசி அனுப்பப்பட்டு உள்ளது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் எனப்படுகிறது.

அதற்கு வானதி சீனிவாசனிடம், “அந்த தரமற்ற ரேஷன் அரிசி அந்தயோத்யா அன்ன யோஜனா என்கிற ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு அனுப்பிவைத்த தொகுப்பு அரிசி” என்று தெரிவித்து உள்ளனர் என்று கூடுதல் தகவல்.

இதைச் சொன்னவுடன் எதுவும் நடக்காததைபோல இடத்தை காலி செய்திருக்கிறாராம் வானதி சீனிவாசன். இந்தச் சம்பவம் குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version