தமிழ்நாடு

‘பாஜக குறித்து விஷமத்தனப் பிரச்சாரம் செய்கிறார்கள்…-‘ நழுவும் வெற்றி வாய்ப்பு; கதறும் வானதி சீனிவாசன்!

Published

on

பாஜகவின் மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் களமிறங்குகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கோவை வந்திருந்தார். அப்போது இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர், நகரத்தின் பிரதான வீதியிலிருக்கும் இஸ்லாமியர் கடை மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், இஸ்லாமிய தரப்பைச் சேர்ந்தவர்கள் பிரச்சனையை பெரிதாக்காமல் சென்றதால் வன்முறைச் சம்பவம் தவிர்க்கப்பட்டது. 

இதையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக கோவை தெற்குத் தொகுதியில் வானதி சீனிவாசனை எதிர்த்துப் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாஜகவை ‘கலவர ஸ்பெஷலிஸ்டுகள்’ என்று கறாராக விமர்சித்தார். இதனால் பாஜக தரப்பினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர். 

இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்துள்ள வானதி சீனிவாசன், ‘பாஜக வந்தாலே ஏதோ கலவரங்கள் வெடிக்கும் என்பது போலவும், தீய சக்தி போலவும் சில அரசியல் கட்சிகள் மற்றும் நபர்கள் விஷமத்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். 

அதிலும் ஒரு அரசியல் கட்சி, எங்களது கட்சிக் கொடியை மற்றும் உடையை போட்டுக் கொண்டு இதைப் போன்ற விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளோம்’ என்று கூறியுள்ளார். 

யோகி ஆதித்யநாத் வந்ததும், அதையொட்டி நடந்த அசம்பாவித சம்பவங்கள் காரணமாகவும் கோவையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக பாஜக தரப்புக்கு இந்த சம்பவம் பெரும் பின்னடைவாக அமையும் என்று சொல்லப்படுகிறது. இதனால் குமுறலில் உள்ளார் வானதி சீனிவாசன். 

seithichurul

Trending

Exit mobile version