இந்தியா

மேற்குவங்கத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கைது: என்ன காரணம்?

Published

on

மேற்கு வங்கத்தில் தமிழக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கொல்கத்தா சென்றர். அப்போது அவர் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அனுமதியின்றி போராட்டம் செய்ததாக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே தமிழக பாஜகவினர் தமிழகத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வன்முறைக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில் பாஜக மகளிர் தேசிய அணி தலைவர் என்ற முறையில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவிற்கு சென்று போராட்டம் நடத்தினார்.

சமீபத்தில் நடந்த வன்முறையில் 12 பேர் உயிரிழந்ததாகவும் இதனை கண்டித்து போராட்டம் நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் வானதி ஸ்ரீனிவாசன், பாஜக எம்பி ரூபா கங்குலி, மேற்கு வங்க மாநில பாஜக மகளிர் அணித் தலைவர் அக்னிமித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த போராட்டம் அனுமதி இன்றி நடத்தப்பட்டுள்ளதாக வானதி ஸ்ரீனிவாசன் உள்பட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version