தமிழ்நாடு

முதல்வர் பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலினிடம் முதல் கோரிக்கை வைத்த வானதி ஸ்ரீனிவாசன்

Published

on

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் 7ஆம் தேதி பதவி ஏற்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சற்றுமுன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது என்பதும் அதில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து நாளை அல்லது நாளை மறுநாள் கவர்னரை நேரில் சந்தித்து ஆட்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் பொறுப்பை ஏற்காவிட்டாலும் இப்போதே அவர் ஒரு சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் அரசு அதிகாரிகளுக்கு சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் என்பதும் அரசு அதிகாரிகள் அவரிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்கவிருக்கும் முக ஸ்டாலின் அவர்களிடம் தனது டுவிட்டர் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளை அவர் கூறியிருப்பதாவது.

கோவையில் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக் குறை இருப்பதாக அறிந்தேன். கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து வழக்கமாக வரும் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டு இருப்பதால் உடனடியாக கோவை மாவட்டத்திற்கு பெற்றுத்தர திரு ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

 

 

Trending

Exit mobile version