சினிமா செய்திகள்

வலிமை படத்தின் வில்லனுக்கு இன்ஸ்பிரேஷனே ‘மாஸ்டர்’ நாயகன் தானாம்..!

Published

on

வலிமை படத்தில் வில்லன் ஆக தெலுங்கு திரைப்பட உலகின் ஹீரோ கார்த்திகேயா நடித்து வருகிறார்.

விரைவில் வெளியாக உள்ள தல அஜித்-ன் வலிமை படத்தில் வில்லன் ஆகதெலுங்கு ஹீரோ கார்த்திகேயா நடிக்கிறார். ஹீரோ ஆக நடிக்கும் ஒருவர் எதற்காக தமிழ் சினிமாவில் வில்லன் ஆக நடிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு கார்த்திகேயா தானே முன் வந்து விளக்கம் அளித்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் விஜய் சேதுபதி தான் கார்த்திகேயா இந்தப் படத்தை தேர்வு செய்ததற்குக் காரணமாம். ஒரு ஹீரோவான விஜய் சேதுபதி கொஞ்சம் கூட தனது நட்சத்திரத் தன்மை குறையாமல் வில்லன் ஆக மாஸ்டர் படத்தில் அசத்தியிருப்பார். இது தான் கார்த்திகேயாவுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்ததாம்.

இன்னும் வலிமை படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நிலுவையில் உள்ளதால் இன்னும் இரண்டு மாதங்களில் படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version