சினிமா செய்திகள்

’வலிமை’ புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு: ரசிகர்கள் கொண்டாட்டம்!

Published

on

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டரை அஜித் ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ’வலிமை’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்றது என்பதும், அதன் பின்னர் தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை உள்பட அனைத்து பணிகளையும் படக்குழுவினர் முடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயாவுக்கு இன்று தனது பிறந்தநாளை அடுத்து பிறந்தநாளுக்கு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ’வலிமை’ படத்தின் டீசர் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்றும் அந்த டீசரில் ’வலிமை’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இருக்கும் என்றும் கூறப்பட்டு வருவதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version