சினிமா

அஜித் ஃபேன்ஸ் பி ரெடி… வலிமை பட முக்கிய வீடியோ ரிலீஸ் இன்று….

Published

on

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அஜித் ரசிகர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற ‘நாங்க வேற மாறி’ மற்றும் ‘நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி அஜித் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த இரண்டு பாடல்களையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இதில், நாங்க வேற மாதிரி பாடல் அஜித்தின் அறிமுக பாடலாகவும், ‘நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ பாடல் அம்மா செண்டிமெண்ட் பாடலாக இருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலை படக்குழு இன்று வெளியிடவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இதையடுத்து #ValimaiThirdSingle என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகி அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version