சினிமா செய்திகள்

’வலிமை’ அடுத்த அப்டேட் கொடுத்த யுவன்ஷங்கர் ராஜா: அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

Published

on

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் அஜித் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ’வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியானது. இந்த வீடியோ மிகக் குறைந்த நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ’வலிமை’ மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போதும் இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் அடுத்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். ’வலிமை’ படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், ’வலிமை’ படத்தின் பாடல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளாக அப்டேட் கேட்டுக்கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக இரண்டு நாளுக்கு ஒரு அப்டேட் தந்து படக்குழுவினர் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

அஜித் ஜோடியாக ஹூமாகுரேஷி நடித்துள்ள இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயா மற்றும் முக்கிய வேடங்களில் புகழ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். எச். வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆயுத பூஜை அல்லது தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version