சினிமா
ரூ.215 கோடிக்கு வியாபாரம்… ரெக்கார்ட் பிரேக் செய்த வலிமை..
ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். அதாவது, நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் இதே டீம் மீண்டும் வலிமை படத்திற்காக இணைந்துள்ளது.
படம் துவங்கி ஒன்றரை வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கூட படக்குழு இன்னும் வெளியிட வில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வலிமை அப்டேட்டை கேட்டு கேட்டு அவர்கள் சோர்ந்து போய்விட்டனர். சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஜூலை மாதம் 3வது வாரத்தில் வெளியாகும் என செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் தியேட்டர், சேட்டிலைட், டிஜிட்டல் என அனைத்து உரிமைகளும் ரூ.210 முதல் ரூ.215 கோடி அளவுக்கு விற்பனை ஆகியுள்ளதாக தற்போது செய்தி கசிந்துள்ளது. இதையடுத்து, ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கூட வெளியாகாமல் எங்கள் தல படம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது என #ValimaiRecordBusiness என்கிற ஹேஷ்டேக்கில் அஜித் ரசிகர்கள் டிவிட்ட்ரில் பதிவிட்டு வருகின்றனர்.