சினிமா செய்திகள்

அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் மேலும் தாமதம்: காரணம் இதுதான்!

Published

on

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் கடந்த ஆண்டு தீபாவளி அன்றே திட்டமிடப்பட்டது. ஆனால் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானது

இந்த நிலையில் சமீபத்தில் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ள நிலையில் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் மே மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது

இந்த நிலையில் தற்போது ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி மேலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ‘வலிமை’ படத்தில் இடம்பெறும் பைக் ஸ்டன்ட் காட்சி ஒன்று ஸ்பெயின் நாட்டில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் ஸ்பெயின் நாட்டில் தற்போது மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு நடைபெறுவது தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது

இதன் காரணமாக இந்த படம் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம்தான் திரையிட வாய்ப்பிருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாராகிவிட்டதாக ஒருசில ஊடகங்களில் வெளிவந்து இருக்கும் செய்தி தவறு என்றும் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த இன்னும் பணிகள் தொடங்கவில்லை என்றும் இயக்குனர் எச்.வினோத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது

‘வலிமை’ படத்தின் ரிலீஸ் மே 1ஆம் தேதி அஜீத் பிறந்த நாளில் இருக்கும் என்று அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது மேலும் தாமதமாகலாம் என்று வெளிவந்துள்ள செய்தியால் அதிருப்தி அடைந்துள்ளனர்

seithichurul

Trending

Exit mobile version