சினிமா செய்திகள்

அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது

தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் ‘வலிமை’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி ‘வலிமை’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து அஜீத் ரசிகர்கள் இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிபிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version