சினிமா செய்திகள்
’வலிமை’ படத்தின் பிரிமியர் காட்சி ரத்து: அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்!
![valimai5 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/valimai5.jpg)
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய திரையரங்கமான பாரீஸில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் கிராக்ஸ் திரையரங்கம் உள்பட ஏராளமான திரையரங்கில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் ’வலிமை’ திரைப்படத்தின் பிரிமீயர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அந்த காட்சி திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் மற்ற காட்சிகள் வழக்கமான திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 90 சதவீத திரையரங்களில் வலிமை திரைப்படம் தான் ரிலீஸ் ஆகிறது என்பதும் மதுரையில் 100 சதவீத திரையரங்கிலும் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்பதும் எனவே இந்த படம் முதல் நாள் வசூலில் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.