சினிமா

இதோ அடுத்த ஆக்‌ஷன்!.. வலிமை படத்தின் மாஸ் ஃபைட் காட்சி வீடியோ….

Published

on

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துகொள்ளலாம். ஏனெனில் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் அஜித்தின் ஆக்சன் காட்சிகள், வில்லன்களின் ஆக்ரோஷமான காட்சிகள், நாயகி ஹூமா குரேஷின் ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ள புரமோஷன் வீடியோவை போனிகபூர் வெளியிட்டது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருந்தது.

இந்நிலையில், மீண்டும் ஒரு சண்டைக் காட்சி வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், வில்லனின் ஆட்கள் பைக்குகளில் அஜித்தை துரத்துவது போலவும், அஜித் அவர்களிடம் மோதுவது போலவும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

Trending

Exit mobile version