சினிமா

வலிமை தீம் மியூசிக் வீடியோ அப்டேட்.. கொண்டாடும் தல ரசிகர்கள்….

Published

on

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அஜித் ரசிகர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற ‘நாங்க வேற மாறி’ மற்றும் ‘நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி அஜித் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த இரண்டு பாடல்களையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இதில், நாங்க வேற மாதிரி பாடல் அஜித்தின் அறிமுக பாடலாகவும், ‘நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ பாடல் அம்மா செண்டிமெண்ட் பாடலாக இருந்தது.

இப்படத்தின் அடுத்த பாடலை படக்குழு வெளியிடவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதையடுத்து #ValimaiThirdSingle என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது. ஆனால், அப்படி எந்த பாடலும் வெளியாகவில்லை.

valimai

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்று ‘விசில் தீம்’ இசை இன்று மாலை 3.30 மணிக்கு வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே, யுவன் – அஜித் கூட்டணியில் பில்லா, மங்காத்தா ஆகிய படங்களில் தீம் மியூசிக் அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், வலிமை தீம் மியூசிக் இசையும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version