சினிமா

வலிமை ரிலீஸுக்கு தேதி குறித்த தயாரிப்பாளர்… அஜித் ஃபேன்ஸ் பி ரெடி….

Published

on

அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா மற்றும் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’. போனிகபூரின் பல கோடி ரூபாய் செலவில் தயாரித்த இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆனால், தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாகவும் திரை அரங்குகளுக்கு 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எனவே, வலிமை படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இரவு நேர மற்றும் ஞாயிறு முழு ஊரடங்குகள் விரைவில் நீக்கப்படும் என வலிமை படக்குழு கணித்துள்ளது. எனவே, மார்ச் 18 அல்லது 17ம் தேதி வலிமை படத்தை ரிலீஸ் செய்யலாம் என போனிகபூர் இறுதியாக முடிவெடுத்துள்ளாராம்.

முடிவு அரசு மற்றும் கொரோனா கைகளில் இருக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version