சினிமா செய்திகள்

‘வலிமை’ ரிலீஸை மீண்டும் உறுதி செய்த படக்குழு: அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்!

Published

on

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு காரணங்களால் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது.

ஆனால் படக்குழுவினர்களை பொருத்தவரை ‘வலிமை’ கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்றும் ஒத்திவைக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறி வருகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் ‘வலிமை’ படத்தின் மலையாள போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு அந்த போஸ்டரில் ஜனவரி 13 ரிலீஸ் என்பதை உறுதி செய்துள்ளது. இதனை அடுத்து ‘வலிமை’ திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்பதே இப்போதைய நிலையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரைதான் ஊரடங்கு உத்தரவு என்பதால் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் 5 காட்சிகள் திரையிட தயாராக இருக்கிறோம் என திரையரங்குகள் தயாரிப்பாளருடன் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஞாயிறு காட்சிகள் மட்டும்தான் திரையிடப்படாது என்றும் மற்ற நாட்களில் 5 காட்சிகளை திரையிடுகிறோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கொடுத்த உறுதிமொழி காரணமாகவே ‘வலிமை’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ‘வலிமை’ படத்தின் ரிலிஸில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version