சினிமா

அஜித் ரசிகர்களுக்கே பிடிக்காத ‘வலிமை’ மேக்கிங் வீடியோ… இப்படி ஆகிப்போச்சே!…

Published

on

2 வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட திரைப்படம் வலிமை. விஸ்வாசம் மாஸ் ஹிட்டுக்குபின் அஜித் நடித்துள்ள திரைப்படம் என்பதால் அவரின் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால், இப்படம் பற்றி எந்த அப்டேட்டுக்கும் கொடுக்காமல் பொறுமையை சோதித்தார் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர். கொரோனா காலத்தில் தன் ரசிகர்கள் கூட்டம் சேர்ந்து எதையும் கொண்டாடக்கூடாது என்பதால் அஜித் எடுத்த முடிவு இது.

எனவே, ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை கூட ஒன்றரை வருடம் கழித்தே வெளியிட்டார் போனிகபூர். அதோடு, இப்படத்தின் மேக்கிங் வீடியோவை எந்த முன்னறிவிப்பும் இன்றி வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கே அதிர்ச்சி கொடுத்தார். இந்த வீடியோ சிறப்பாக இருந்தாலும், படப்பிடிப்பில் அஜித் பைக்கிலிருந்து கீழே விழும் காட்சிகளையும் அதில் இணைத்துள்ளனர். வீழ்ந்த பின் எழுந்து நடப்பதே வெற்றி என்கிற ரீதியில் கருத்தும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், தங்களின் மாஸ் ஹீரோ கீழே விழுவதை எந்த ரசிகனும் பார்க்க விரும்ப மாட்டான். அதோடு, இது அஜித்தின் மாஸ் ஹீரோ இமேஜையும் பாதிக்கும். ஒருபக்கம், கீழே விழுவதை வீடியோ பிடித்து விளம்பரத்திற்காக பயன்படுத்தியுள்ளனர் என விஜய் ரசிகர்கள் ஒருபக்கம் கிண்டலடிக்க துவங்கி விட்டனர்.

இந்நிலையில், வலிமை மேக்கிங் வீடியோ வெளியாகி 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை 5 மில்லியன் பேர் மட்டுமே பார்த்துள்ளனர். இது மிகவும் குறைவான வியூஸ் ஆகும். ஏனெனில், சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ஒரேநாளில் 10 மில்லியன் வியூஸ்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version