சினிமா

விஜய் பட சாதனை முறியடித்ததா வலிமை? முதல் நாள் வசூல் குறித்த தகவல்

Published

on

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்றைய முதல் நாள் வசூல் அனைத்து சாதனைகளையும் தகர்த்து விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான ’வலிமை’ திரைப்படம் நேற்று கிட்டத்தட்ட 90% திரையரங்குகளில் தமிழகத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியா முழுவதும் இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகி உள்ளது என்பதும் உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் 36 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் இந்த வசூல் சாதனையை இதுவரை விஜய் படங்கள் எதுவுமே வசூல் செய்தது இல்லை என்பதால் விஜய்யின் அனைத்து படங்களின் சாதனையும் ’வலிமை’ முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் தமிழகம் தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 20 கோடியும் வெளிநாடுகளில் 20 கோடியும் வசூல் செய்திருந்தால் இந்த படம் முதல்நாளில் மட்டும் 76 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்றைய வசூல் தவிர வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் சேர்த்து மொத்தம் 200 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பட்ஜெட் 180 கோடி தான் என்ற நிலையில் அவற்றில் சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகிய ஆகியவையும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இந்த படம் தயாரிப்பாளருக்கு 100 கோடி ரூபாய் லாபத்தை சம்பாதித்துக் கொடுக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version