சினிமா செய்திகள்

‘ஆர்.ஆர்.ஆர்’, ‘வலிமை’ ரிலீஸ் தள்ளிப்போகின்றதா?

Published

on

தமிழக அரசு நேற்று திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து இந்த மாதம் வெளியாக வேண்டிய எஸ்எஸ் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் அஜித்தின் ‘வலிமை’ ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது

அதன்படி சற்றுமுன் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான புரமோஷன் பணிகளை கோடிக்கணக்கில் செலவு செய்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை அடுத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகிறது. இந்தப் படம் அனேகமாக ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என்றும் இதுகுறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது

தமிழக அரசை பொறுத்தவரை ஜனவரி 10-ஆம் தேதி வரை மட்டுமே திரை அரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி 13ஆம் தேதி என்பதால் 10-ஆம் தேதிக்கு பின்னர் பத்தாம் தேதிக்கு பின்னர் தமிழக அரசின் அறிவிப்பை பொருத்தே ‘வலிமை’ படம் ரிலீஸாவது உறுதி செய்யப்படும் என்றும் கூறபடுகிறது. இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version