Connect with us

சினிமா செய்திகள்

ரஷ்யாவில் வலிமை – பீஸ்ட் படப்பிடிப்பு: அஜித், விஜய் சந்திப்பு?

Published

on

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் 5 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருப்பதாகவும் அந்த படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக வலிமை படக்குழுவினர் செப்டம்பர் மாதத்தில் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர்கள் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்யாவில் ’பீஸ்ட்’ படக்குழுவினர் ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் அஜித்தின் ‘வலிமை’ மற்றும் விஜய்யின் ’பீஸ்ட்’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ரஷ்யாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இரண்டு படக்குழுவினர் பார்த்து வைத்துள்ள லொகேஷன்களும் கிட்டத்தட்ட அருகருகே உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து அஜித் விஜய் சந்திப்பு ரஷ்யாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த தகவல் கோலிவுட்டில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்-விஜய் ஆகிய இருவருமே தொழிலில் போட்டியாளர்களாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், அவ்வப்போது இருவரும் சந்தித்து தங்களுடைய நட்பை பரிமாறிக் கொள்வார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் மீண்டும் ரஷ்யாவில் இந்த சந்திப்பு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul
வணிகம்6 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்9 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா9 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!