சினிமா செய்திகள்
’வலிமை’ வில்லனுக்கு நிச்சயதார்த்தம்: 11 ஆண்டு காதலியை கைப்பிடிக்கின்றார்!
தல அஜித் நடித்துள்ள ’வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதை அடுத்து அஜீத் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தல அஜீத் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பதும் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டும் ரஷ்யாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் காதலித்து வரும் பெண்ணை தற்போது கைபிடிக்க இருப்பதாகவும் எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2010 ஆம் ஆண்டு தனது காதலியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தற்போது நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த இரண்டு புகைப்படங்களும் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
11 ஆண்டுகாலம் காதலித்த பெண்ணை கடைப்பிடித்து உள்ளதை அடுத்து அவருக்கு கார்த்திகேயா மற்றும் அஜீத் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கார்த்திகேயா ’வலிமை’ படத்தில் வில்லனாக மிரட்டி உள்ளதாகவும் இந்த படம் வெளியான பிறகு அவருக்கு தமிழில் மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
அஜித்துடன் ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்த பிறகுதான் அருண் விஜய்க்கு தமிழில் தனக்கென ஒரு மார்க்கெட் கிடைத்தது என்றும் அதே போல் அஜித்துடன் ’வலிமை’ படத்தில் நடித்துள்ள கார்த்திகேயாவுக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
Feeling elated to announce my engagement with my best friend who now is my partner for life..
From 2010when i first met #Lohitha in nitwaranagal to now and many more such decades.. pic.twitter.com/xXYp7pcH4K— Kartikeya (@ActorKartikeya) August 23, 2021