பல்சுவை

எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் என்ன அர்த்தம்? காதலர் தினம் ஸ்பெஷல்!

Published

on

இன்று பிப்ரவரி 14, ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதியை உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த காதலர் தினமானது திருவிழாவைப்போல விமரிசையாக கொண்டாடப்படுகிறது இளைஞர்கள் மத்தியில். பிப்ரவரி மாதம் தொடங்கியதும் முதலில் நியாபகம் வருவது காதலர் தினம் தான்.

#image_title

உலகையே இயக்கிக்கொண்டிருக்கும் காதலர் தினத்தன்று சில குறியீடுகளுக்காக குறிப்பிட்ட நிறத்தில் ஆடைகள் அணிவதும் ஒரு வழக்கம். காதலர் தினத்தில் அணியும் ஆடை ஒவ்வொன்றுக்கும் அதன் நிறம் சார்ந்து அர்த்தங்களும் உண்டு. எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் என்ன அர்த்தம் என்பதை இப்போது பார்ப்போம்.

நீலம்:
நீல நிற ஆடையை அணிந்தால் நீங்கள் காதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் மீது காதல் கொண்டவர்கள் உங்களிடம் வந்து காதலை சொல்லலாம் என்று அர்த்தம்.

ஆரஞ்ச்:
ஆரஞ்ச் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சென்றீர்கள் என்றால் நீங்கள் யாரோ ஒருவருக்கு காதலை சொல்லப் போகிறீர்கள் என்று அர்த்தம். எனவே நீங்கள் ஆர்ஞ்ச் நிற ஆடை அணிந்து சென்றால், உங்களை பார்த்ததும் உஷார் ஆகிவிடுவார்கள்.

பச்சை:
காதலர் தினத்தில் நீங்கள் பச்சை நிற ஆடை அணிந்திருந்தால் நீங்கள் காதலை சொன்ன நபர் எந்த பாதிலும் சொல்லாமல் காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்கிறார், காதலரின் பதிலுக்காக காத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

வெள்ளை:
காதலர் தினத்தில் நீங்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தால், நான் ஏற்கனவே காதலில் இருக்கிறேன் என்பதை உணர்த்தும்.

மஞ்சள்:
காதலர் தினத்தில் நீங்கள் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்தால், சமீபத்தில் தான் உங்களுக்கு காதல் முறிவு ஏற்பட்டிருக்கிறது என்ற அர்த்தம். நீங்கள் அடுத்த காதலுக்கு தயாராக உள்ளதாகவும் இது உணர்த்தும்.

பர்ப்பிள் அல்லது கிரே:
பர்ப்பிள் அல்லது கிரே நிறத்தில் ஆடை அணிந்தால், உங்களுக்கு இந்த காதல் எதிலும் ஆர்வம் இல்லை என்று அர்தம்.

கருப்பு:
கருப்பு பொதுவாகவே எதிர்ப்பின் வண்ணமாகவே பார்க்கப்படுகிறது. காதலர் தினத்தில் நீங்கள் கருப்பு ஆடையை அணிந்து கொண்டால் சமீபத்தில் தான் உங்கள் காதல் நிராகரிக்கப் பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

சிவப்பு:
பொதுவாக காதலுக்கு அடையாளமாக பார்க்கப்படும் நிறம் சிவப்பு. இந்த காதலர் தினத்தில் நீங்கள் சிவப்பு நிற உடை அணிந்தால் நீங்கள் உங்கள் காதலரோடு சந்தோஷமாக உள்ளீர்கள் என்று அர்த்தம்.

Trending

Exit mobile version