தமிழ்நாடு

‘காதலர் தினத்தின் Dress Code: எந்த நிற ஆடைக்கு என்ன அர்த்தம்?

Published

on

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து இன்னும் நான்கு நாட்களில் காதலர் தினம் வர உள்ளது. இதனை அடுத்து இந்த ஆண்டும் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட உலகெங்கிலுமுள்ள காதலர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தில் ஒரு குறிப்பிட்ட வகை டிரஸ் கோடு உள்ள உடை அணிந்தால் அந்த உடைக்கு காதலர் தினத்தில் ஒரு அர்த்தம் உள்ளது என்பது காதலர்களுக்குள் மட்டும் தெரிந்த ஒரு ரகசியம் ஆகும்.

நீங்கள் புதிதாக காதலிப்பதாக இருந்தால் நீங்களும் காதலர் தினத்தில் அணியும் எந்தெந்த உடைகளுக்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பச்சை நிறம்: உங்களைக் காதலிக்க நான் ரெடி என்றும், உங்களுக்காக நான் காத்திருக்கிறேன் என்றும் அர்த்தம்

ரோஸ் நிறம்: இப்பொழுதுதான் காதலை ஏற்றுக்கொண்டேன், வேறு யாரும் தொல்லை தர வேண்டாம் என்று அர்த்தம்

நீல நிறம்: இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு காதலர் யாரும் இல்லை, என்னை அணுகலாம் என்பதை குறிக்கும் நிறம் தான் நீல நிறம்

வெள்ளை நிறம்: ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறேன். எனவே வேற ஆளைப் பார்க்கலாம் என்பதை உணர்த்துவது வெள்ளை நிறம்.

ஆரஞ்சு நிறம்: காதலிக்கவும் ரெடி, நிச்சயம் செய்யவும் ரெடி என்பதை உணர்த்தும் நிறம்

மஞ்சள் நிறம்: எனக்கு காதல் தோல்வி. இனிமேல் காதலிக்கும் ஐடியா இல்லை என்று அர்த்தம்

சிவப்பு நிறம்: காதலுக்கு நான் எதிரி, எனக்கும் காதலுக்கு நான் ரொம்ப தூரம்காதல், காதல் என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது என்று அர்த்தம்.

கிரே நிறம்: காதல் குறித்து எந்த ஐடியாவும் இல்லை, விருப்பமும் இல்லை. வீட்டில் சொல்பவரை திருமணம் செய்யும் குணமுடையவர் என்று அர்த்தம்

வெள்ளை நிறம்: ஏற்கனவே காதலிக்கின்றேன், விரைவில் திருமணம் என்று அர்த்தம்

seithichurul

Trending

Exit mobile version