சினிமா

Valentine’s Day 2023: பிரபலமான பழைய காதல் திரைப்படங்கள் திரையிடும் தியேட்டர்கள்!

Published

on

ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாரம் வந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும், காதலர் தினம்/ வாரம் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் உலகம் முழுவதும் மிகவும் ஆடம்பரத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் அன்பிற்கும், அன்பின் சக்திக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காதலர்கள் ஒருவருக்கொருவர் சாக்லேட், பூக்கள், க்ரீட்டிங் கார்டு போன்ற பரிசுகளை பரிமாரிக்கொள்வர்.

காதலர் வாரம் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் ரோஜா தினத்தில் தொடங்கி காதலர் தினத்துடன் முடிவடைகிறது.

  • ரோஜா தினம் – பிப்ரவரி 7
  • ப்ரொப்போஸ் தினம்- பிப்ரவரி 8
  • சாக்லேட் தினம் – பிப்ரவரி 9
  • டெடி தினம்- பிப்ரவரி 10
  • ப்ராமிஸ் தினம்- பிப்ரவரி 11
  • ஹக் தினம்- பிப்ரவரி 12
  • கிஸ் தினம் – பிப்ரவரி 13
  • காதலர் தினம் – பிப்ரவரி 14

இந்நிலையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காதல் படங்களை, காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் திரையிட , தியேட்டர்கள் முடிவு செய்துள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில், என்னென்ன திரைப்படங்கள் வெளியாகும் என பி.வி.ஆர் சினிமாஸ் அறிவித்துள்ளது. அந்தப் படங்களின் பட்டியல் இதோ!

  • 1995 ஆம் ஆண்டு இந்தியில் ஷாரூக்கான், கஜோல் நடிப்பில் , இயக்குநர் ஆதித்யா சோப்ராவின் இயக்கத்தில் பிளாக் பஸ்டர் ஹிடாக அமைந்தப் படம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’. அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது இப்படம் காதலர்களால் கொண்டாடப்பட்டது.
  • 1997 ஆம் ஆண்டு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உண்மையான கப்பல் விபத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் டைட்டானிக். உலகளவில் அதிகமான வசூல் செய்த படம் என்ற பெருமையை டைட்டானிக் பெற்றது. உண்மையான கதையை மையமாக கொண்ட இப்படம் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தது.
  • 2001 ஆம் ஆண்டு மாதவன், ரீமாசென் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனனின் முதல் படமாக வெளியான படம் மின்னலே. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் இன்றுவரை அனைவராலும் ரசிக்கப்படுகிறது.
  • 2010 ஆம் ஆண்டு சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனனின் மற்றொரு காதல் படைப்பாக வெளிவந்த படம் விண்ணை தாண்டி வருவாயா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு இன்றும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • 2015 ஆம் ஆண்டு நடிகர்கள் நிவின் பாலி, நடிகைகள் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான படம் பிரேமம். இயக்குனர், மலர் டீச்சர் கேரக்டரால் பலர் இதயங்களை கொள்ளையடித்தார்.

உங்கள் அன்புக்குரியவரை இந்தத் திரைப்படங்களுக்கு அழைத்துச் சென்று ஒருவருக்கொருவர் அன்பான நேரத்தை செலவிடுங்கள்.

seithichurul

Trending

Exit mobile version