சினிமா

Valentine’s Day 2023: காலம் கடந்தாலும் காதல் மாறாது… பிரபலமான தமிழ் காதல் திரைப்படங்கள்!

Published

on

ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாள் வந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும், காதலர் தினம்/ வாரம் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் உலகம் முழுவதும் மிகவும் ஆடம்பரத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் அன்பிற்கும், அன்பின் சக்திக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காதலர்கள் ஒருவருக்கொருவர் சாக்லேட், பூக்கள், க்ரீட்டிங் கார்டு போன்ற பரிசுகளை பரிமாரிக்கொள்வர்.

காதலர் தினம்

காதலர் வாரம் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் ரோஜா தினத்தில் தொடங்கி காதலர் தினத்துடன் முடிவடைகிறது.

  • ரோஜா தினம் – பிப்ரவரி 7
  • ப்ரொப்போஸ் தினம்- பிப்ரவரி 8
  • சாக்லேட் தினம் – பிப்ரவரி 9
  • டெடி தினம்- பிப்ரவரி 10
  • ப்ராமிஸ் தினம்- பிப்ரவரி 11
  • ஹக் தினம்- பிப்ரவரி 12
  • கிஸ் தினம் – பிப்ரவரி 13
  • காதலர் தினம் – பிப்ரவரி 14

காதலர் தினத்தை முன்னிட்டு தமிழில் பிரபலமான காதல் படங்கள் பற்றி நாம் இப்போது காணலாம்.

  • கடந்த 2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடிப்பில் வெளிவந்தப் படம் அலைபாயுதே. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இத்திரைப்பட த்தை புன்னகை மலர பார்க்கும் காதலர்கள் கூட்டம் இன்றைக்கும் உண்டு.
  • 2001 ஆம் ஆண்டு மாதவன், ரீமாசென் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனனின் முதல் படமாக வெளியான படம் மின்னலே. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் இன்றுவரை அனைவராலும் ரசிக்கப்படுகிறது.
  • 2004 ஆம் ஆண்டு பாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி நடிப்பில் வெளியான படம்  காதலுக்கு மரியாதை . இளையராஜா இசையமைத்த இப்படம் ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
  • 2010 ஆம் ஆண்டு சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனனின் மற்றொரு காதல் படைப்பாக வெளிவந்த படம் விண்ணை தாண்டி வருவாயா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு இன்றும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

 

Trending

Exit mobile version