பல்சுவை

வாக்குறுதியைப் பெறும் ‘பிராமிஸ் தினம்’!

Published

on

காதலர் தினத்தை வரவேற்கும் விதமாகப் பிப்ரவரி 14-ம் தேதி பிராமிஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

பிராமிஸ் தினம் அன்று காதலர்கள் அவர்களின் அன்புக்குரியவர்களிடம் வாக்குறுதிகளை அளிப்பார்கள்.

காதலர்கள் தினம் வாரத்தின் ஐந்தாவது நாளாக வரும் இந்த பிராமிஸ் தினம் தான் அந்த காதல் உறவில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய தொடக்கமாக இருக்கிறது.

பொதுவாகக் காதல் என்பது சத்தியம், நம்பிக்கை அடிப்படையில் உருவாகுவது. பிராமிஸ் தினத்தன்று காதலர்கள் செய்யும் சத்தியம், காதலர்கள் இடையிலான உறவை வலுப்பெறச் செய்யும்.

காதலர்கள் மட்டுமல்லாமல் திருமணமானவர்களும் இந்த நாள் தங்களது வாழ்க்கையைப் புதுப்பித்து வாழ வாய்ப்பு அளிக்கிறது. எனவே உங்கள் அன்புக்குரியவரிடம் என்ன நடந்தாலும் உன்னை விட்டு பிரிய மாட்டேன். என்னை நம்பி வந்தால் உன்னை வாழ்க்கையின் வரமாகப் பார்த்துக்கொள்வேன்.

என் வாழ்வில் எந்த ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் உன்னோடு அதை எதிர்கொள்வேன், உன்னை விட்டு பிரிய மாட்டேன். மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வேன். இதுவே என் வாழ்வின் லட்சியம் என்று உங்கள் காதலரிடம் வாக்குறுதிகளை வழங்குங்கள்.

seithichurul

Trending

Exit mobile version