தமிழ்நாடு

விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை ராணுவத்துக்கு பாஜகவின் வாஜ்பாய் உதவினார்: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

Published

on

சமீபத்தில் இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே ஈழ போரின்போது இலங்கை ராணுவத்துக்கு அப்போதைய இந்திய அரசு உதவி செய்ததாக கூறினார். இதனையடுத்து அதிமுக அப்போது ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தது.

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியதை அதிமுகவினரே ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அதனால் தான் கண்டனப் பொதுக்கூட்டத்தில் ஆபாச நடனம் அரங்கேறியிருக்கிறது. அந்த அருவருப்பைப் பார்த்தால் ராஜபக்சேவே சிரித்து அலட்சியம் செய்திருப்பார். இந்த பொதுக்கூட்டத்தின் பின்னணியில் மத்திய பாஜக அரசு இருக்கிறதோ என்றும் சந்தேகம் எழுகிறது.

விடுதலைப் புலிகளின் கடற்படை பிரிவை அழிக்க வாஜ்பாய் உதவினார், ராணுவ ரீதியான உதவி, பயிற்சிகளை வாஜ்பாய் அளித்தார் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அங்குள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்று இரங்கல் குறிப்பேட்டில் எழுதியுள்ளார். அதிமுகவினருக்கு உண்மையாகவே ஈழத்தமிழர் மீது அக்கறை இருக்குமென்றால், வாஜ்பாய் சார்ந்திருந்த பாஜகவைக் கண்டித்துதானே முதற்கட்டமாகப் பொதுக்கூட்டம், போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.

seithichurul

Trending

Exit mobile version