இந்தியா

புத்தாண்டில் சாமி கும்பிட சென்ற 12 பக்தர்கள் நெரிசலில் சிக்கி பரிதாப பலி!

Published

on

புத்தாண்டு அன்று கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்ற 12 பக்தர்கள் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் என்பதும் இந்த கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று புத்தாண்டு தினத்தை அடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி கோவிலில் கூடுதலாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி முதல் கூட்டம் அதிகமாகி வந்த நிலையில் திடீரென கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதை அடுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட நெரிசலில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் ஒரு சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திடீரென ஏற்பட்ட நெரிசல் காரணமாக பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினரும் எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு தினத்தில் சாமி கும்பிட சென்ற பக்தர்கள் 12 பேர் பரிதாபமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version