சினிமா செய்திகள்

அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! கவியரசு வைரமுத்து இரங்கல்

Published

on

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விவேக்கின் மறைவு குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அவருடைய நினைவலைகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சற்று முன்னர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்.

Trending

Exit mobile version