தமிழ்நாடு
‘செக்ஸ் டார்ச்சர் வைரமுத்து’: விக்கிப்பீடியாவில் அட்டூழியம்!
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த விவாதம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை சட்ட நடவடிக்கை எதுவும் இல்லாததால் தொடர்ந்து இது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதில் சின்மயிக்கு ஆதரவாக ஒரு குரூப்பும், வைரமுத்துவுக்கு ஆதரவாக ஒரு குரூப்பும் சமூக வலைதளத்தில் குரல் எழுப்பி வருகிறது. தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த வைரமுத்து இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரை பொய்யர் என குறிப்பிட்டுள்ள சின்மயி வைரமுத்துவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தற்போது கவிஞர் வைரமுத்துவின் விக்கிப்பீடியா பக்கத்தில் அவரின் நேட்டிவ் நேம் என்ற இடத்தில் ‘செக்ஸ் டார்ச்சர் வைரமுத்து’ என பதிவிட்டுள்ளனர். இதனை யார் செய்தார்கள் என்பது தெரியவில்லை. இது வைரமுத்து ஆதரவாளர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.