சினிமா

சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள்: பதில் அளித்த வைரமுத்து!

Published

on

தேசிய விருது பெற்ற பிரபல பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து மீது கடந்த சில தினங்களாக தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. இதில் பாடகி சின்மயி நேரடியாக களத்தில் குதித்து வைரமுத்து மீது சரமாரியாக பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்.

இதனால் டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விவாதங்கள் அனல் பறக்கிறது. திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து நடிகை சின்மயிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. நடிகை சின்மயிக்கு இதில் நேரடியாக பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில் வைரமுத்து மீது தொடர்ச்சியாக வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் முதல்முறையாக மறைமுகமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.

வைரமுத்துவின் இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த சின்மயி வைரமுத்துவை பொய்யர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version