தமிழ்நாடு

மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்: ராஜீவ் காந்தியை மிரள வைத்த வைகோ மோடியை என்ன செய்யப்போகிறார்?

Published

on

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார். திமுகவின் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மோடி அரசை என்ன செய்யப்போகிறார் என்ற ஆவல் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

கடந்த மக்களவை தேர்தலின் போது மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படும் என திமுக உடன்படிக்கை செய்துகொண்டது. அதன்படி திமுக அளித்த ஒரு ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பின் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார்.

வைகோ தனது ஆக்ரோஷமான வலுவான பேச்சுக்கள் மூலம் பல இந்திய தலைவர்களை கவர்ந்தவர். அவர் திமுகவில் இருந்தபோது 1978 முதல் 1996 வரை தொடர்ந்து மூன்றுமுறை ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டார். 1998 முதல் 2004 வரை சிவகாசி மக்களவை உறுப்பினராக வென்றும் நாடாளுமன்றத்துக்கு சென்றார். ஒருமுறை கூடங்குளம் அணு உலை தொடர்பாக வைகோவின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தப்பித்து ஓடினார். அப்போது வைகோ, மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் எங்கே செல்கிறீர்கள்? என்று ராஜீவ் காந்தியையே மிரள வைத்தவர்.

வைகோ நாடாளுமன்றத்துக்கு சென்று 15 ஆண்டுகள் கழிந்து தற்போது மீண்டும் செல்ல உள்ளார். ஏற்கனவே தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கவனிக்கத்தக்க வகையில் செயல்பட்டு வரும் நிலையில் வைகோவின் வரவு மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மோடி அரசுக்கு இவர்கள் கடும் சிரமமாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் டைகர் ஈஸ் பேக் என்ற ஹேஷ் டேக்குகளை மதிமுகவினர் பரப்பி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version