தமிழ்நாடு

டெல்லிக்கு வந்த அன்றே பாஜகவை அட்டாக் செய்ய விரும்பவில்லை; வெய்ட் அன்ட் சீ: வைகோவின் அதிரடிக்கு இனிமேல் பஞ்சம் இருக்காது!

Published

on

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் நாளை மாநிலங்களவையில் பதவியேற்க உள்ளார்கள். அவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முக்கியமான ஒருவர்.

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள வைகோவுக்கு நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்றபோது உற்சாக வரவேற்பு கொடுத்தனர் மதிமுக தொண்டர்கள். வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க டெல்லி சென்றுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை உற்சாகமாக சந்தித்த வைகோ, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவைக்கு திமுகவால் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிமுக உறுப்பினராக பதவிப் பிரமாணம் ஏற்க டெல்லி வந்திருக்கிறேன். எனக்கு மாநிலங்களவையில் பேச இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் மட்டுமே தரப்படும். இருந்தாலும் என் சக்திக்கு ஏற்ற வகையில் தமிழக உரிமைகளை காக்க, இந்திய ஜனநாயகத்தைக் காக்க, சுதந்திர தமிழீழத்திற்கு வாக்கெடுப்பு நடத்த உரிய உணர்வை வடநாட்டு தலைவர்களுக்கு ஏற்படுத்த முயற்சி செய்வேன் என்றார்.

இதனையடுத்து வைகோவிடம் செய்தியாளர்கள், பாஜக ஆட்சி 50-வது நாளை நிறைவு செய்துள்ளது தொடர்பாக கருத்து கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், டெல்லிக்கு வந்த அன்றே பாஜகவை அட்டாக் செய்ய விரும்பவில்லை. வெய்ட் அன்ட் சீ என்று பதிலளித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் நெக்ஸ்ட் மசோதா தாக்கல் குறித்த தனது எதிர்ப்பை தெரிவித்தார் வைகோ.

seithichurul

Trending

Exit mobile version