தமிழ்நாடு

தமிழகத்தில் ஆட்சிமாற்றம்: 7 பேர் விடுதலை சாத்தியமா?

Published

on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை தற்போது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியிருந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே 7 தமிழர்களை விடுதலை செய்ய அமைச்சரவை கூடி தீர்மானம் இயற்றியது. அந்தத் தீர்மானத்திற்கு சமீபத்தில் பதிலளித்த கவர்னர் 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனை அடுத்து தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்த கட்சிகளில் ஒன்று திமுக என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் 7 தமிழர்களை விடுதலை குறித்து அடிக்கடி குரல் கொடுத்து வந்தன. காங்கிரஸ் மட்டுமே 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஏழு தமிழர்கள் விடுதலை சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இதுகுறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முதல்வர் முக ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version