இந்தியா

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கே சொந்தம்: மோடியை சந்தித்து சவால் விட்ட வைகோ!

Published

on

பிரதமர் மோடியை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகளுக்கான மனுவை அளித்தி, அதனை நிறைவேற்றி தருமாறு பிரதமரை வலியுறுத்தினார் வைகோ.

பிரதமர் மோடியை சந்தித்த போது வைகோ, காஞ்சிப் பட்டு ஆடை அணிவித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள திருக்குறள், ஜி.யு.போப், ட்ரூ, ஜான் லாசரஸ் ஆகியோரின் மொழிபெயர்ப்பு நூல்களை அன்பளிப்பாக அளித்தார். தொடர்ந்து திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து மனு ஒன்றை பிரதமரிடம் அளித்தார் வைகோ. அதில், ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைகள் தொழில் பாதுகாப்பு குறித்தும், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், கூடங்குளத்தில் அணுக்கழிவுகளைக் கொட்டக்கூடாது என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் மேகதாட்டு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என பிரதமரிடம் விளக்கினார்.

தொடர்ந்து, அணை பாதுகாப்பு மசோதாவால், இந்தியாவில் பாதிக்கப்படும் மாநிலம் தமிழகம்தான் என்றும் அந்தந்த மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள அணைகளின் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தம் என்றால், தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று கேட்கும் நிலை வரும் எனவும் சுட்டிக்காட்டி சவால் விட்டார் வைகோ.

seithichurul

Trending

Exit mobile version