சினிமா செய்திகள்

வடிவேலுவின் பேய்மாமா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Published

on

நீண்ட இடைவேளைக்கு பிறகு 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு நடிக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகி ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது.

படத்திற்கான ஷூட்டிங்கும் செட்கள் அமைத்து தொடங்கின. ஆனால், தான் சொல்லும் மேக்கப் மேன், உடை அலங்கார ஆட்களைத் தான் வைக்க வேண்டும் என வடிவேல் முரண்டு பிடித்து ஷூட்டிங் வர மறுத்து விட்டதாக தகவல் வெளியானது.

இதனால், இந்த படத்தை தயாரிக்க முன் வந்த இயக்குநர் ஷங்கர் வடிவேலு மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.

அத்துடன், எந்தவொரு படத்திலும் வடிவேலு கமீட் ஆகாமல் இருந்தார்.

இந்நிலையில், சார்லி சாப்ளின் 2 படத்தை சமீபத்தில் இயக்கிய சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் பேய்மாமா என்ற படத்தில் நடிக்க வைகைப் புயல் வடிவேலு ஒப்பந்தமாகி உள்ளார். அந்த படத்தின் போஸ்டரும் நேற்று வெளியாகி உள்ளது.

சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், வடிவேலுவை வைத்து பேய் படம் ஒன்றை இயக்க சக்தி சிதம்பரம் திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்திற்காகவாவது, வடிவேலு முழுமையாக நடித்து கொடுத்து அவரது கோடான கோடி ரசிகர்களுக்கு புதிய மீம் டெம்ப்ளேட்களை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version