சினிமா செய்திகள்

இனிமேல் ஷங்கர் படத்தில் நடிக்க மாட்டேன்: வடிவேலு

Published

on

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வடிவேலு நடித்துக்கொண்டிருந்த ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ படத்தின் படப்பிடிப்பு ஒரு சில மாதங்கள் நடைபெற்ற நிலையில் அந்த படம் நிறுத்தப்பட்டது. வடிவேலு ஒத்துழைப்பு கொடுக்காததால் தான் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்றும் மேலும் இந்த படத்திற்காக போடப்பட்டிருந்த ரூபாய் 10 கோடி செட் வடிவேலு ஒத்துழைப்பு கொடுக்காததால் நஷ்டம் ஆகி விட்டதாகவும் அதனால் அவர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதன் காரணமாக வடிவேலுக்கு ரெக்கார்ட் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து நேற்று பேட்டியளித்த வடிவேலு, ஷங்கர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சனைகளும் பேசித் தீர்க்கப்பட்டு விட்டது என்றும் சுபாஸ்கரன் அவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார் என்றும், இனி நான் நடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறினார்.

மேலும் ஷங்கர் படத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும் அவர் இருக்குமிடம் தலை வைத்து கூட படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்தார். அதேபோல் சரித்திரக் கதைகளிலும் இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

தற்போது லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கி வரும் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் நடித்து நடித்து வருவதாகவும் இன்னும் ஒரு சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பதாக இருந்த இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் 2 படம் கைவிடப்பட்டதாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்களை தொடர்ந்து சிரிக்க வைக்கப் போவதாகவும் மக்களை போதுமான அளவு சிரிக்க வைத்த பின்னர் தான் என்னுடைய உயிர் போகும் என்றும் வடிவேலு அந்த பேட்டியின்போது கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version