சினிமா செய்திகள்

வடிவேலு திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு: எதிர்பார்த்த அதே டைட்டில் தான்!

Published

on

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த திரைப்படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சதீஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கும் ’நாய் சேகர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு, சமீபத்தில் அந்த டைட்டில் அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வடிவேலு படத்துக்கு வேறு டைட்டில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் சற்று முன்னர் லைக்கா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த டைட்டில் எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாய் சேகர் மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய இரண்டு தலைப்புகளில் படங்கள் வெளியானாலும் ரசிகர்களுக்கு எந்தவித குழப்பமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடி இல்லை என்றாலும் பிரபல நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

seithichurul

Trending

Exit mobile version