சினிமா

நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜுக்கு ஒமிக்ரானா? அமைச்சர் மா சுப்பிரமணியன்

Published

on

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் ஆகிய இருவருக்கும் ஒமிகிரான் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் பணிகளுக்காக நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய மூவரும் லண்டன் சென்று இருந்தனர். லண்டனில் இருந்து திரும்பிய வடிவேலுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் அவருக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வடிவேலுவை எடுத்த இயக்குனர் சுராஜூக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் ஆகிய இருவருக்கும் ஒமிகிரான் தொற்று பரவி இருக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் பரிசோதனை செய்ய மாதிரி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரிசோதனையின் முடிவில் தான் ஒமிகிரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நடிகர் வடிவேலுக்கு ஒமிகிரான் தொற்று பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version