சினிமா செய்திகள்

சினிமாவில் கம்-பேக் கொடுக்கிறாரா வடிவேலு; வைரலாகும் ‘புதுப் பட’ போஸ்டர்!

Published

on

‘வைகைப் புயல்’ என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாக்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். பல்வேறு காரணங்களால் அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது தடை பட்டுள்ளது.

குறிப்பாக ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ திரைப்படத்தில் அவருக்கும் இயக்குநர் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் தமிழில் எடுக்கப்படும் திரைப்படங்களில் நடிப்பது சிக்கலானது. தற்போது இந்தப் பிரச்சனைத் தீர்க்கப்பட்டு விட்டது என்று திரைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக வடிவேலு, இனி திரைப்படங்களில் முன்பை போல நடிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. வடிவேலு தரப்பும், கடந்த சில ஆண்டுகளாக ‘நெட்ஃபிளிக்ஸ்’ தளத்திற்காக ஒரு படம் செய்ய உள்ளதாக கூறி வருகிறது.

அது குறித்தான பணி தற்போது நடந்து வருவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. இந்த திரைப்படத்தை ‘சூது கவ்வும்’ பட இயக்குநர் நலன் குமாரசாமி இயக்குவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இந்தப் படம் குறித்தான ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படக்குழு, எந்த போஸ்டரையும் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடவில்லை. அதனால் இந்த போஸ்டரின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தப் புதியப் படத்திற்கு ‘காமெடி கௌபாய்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக போஸ்டர் மூலம் தெரிகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version