தமிழ்நாடு

சென்னையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்: ஆன்லைன் பதிவு தேவையா?

Published

on

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதற்கு முக்கிய காரணம் தமிழக மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் என்றும் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள தினந்தோறும் மக்கள் தடுப்பு முகாம்களில் வரிசையில் காத்திருந்து போட்டு வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நல்ல முறையில் ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் மிக அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று மக்கள் அனைவரும் புரிந்து கொண்டனர் என்பதும் திரையுலக பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டதை அடுத்து அவரது ரசிகர்களும் விருப்பத்துடன் தடுப்பூசியை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதன் காரணமாக அவ்வப்போது தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னையில் தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின் படி சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் பதிவு தேவையில்லை என்றும் ஆதார் உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணத்துடன் வந்து நேரடியாக தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று நாட்களுக்கு பின் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் இன்று ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்ள வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வராவிட்டால் மீண்டும் முகாம்கள் நிறுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version