உலகம்

கொரோனா தடுப்பூசி போட்ட பின் எத்தனை மாதங்களுக்கு எதிர்ப்புசக்தி இருக்கும்?

Published

on

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்று Pfizer, AstraZeneca தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி மூலம் கொரோனா தொற்றுக்கு எதிராக ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை நாட்களுக்கு உடலில் இருக்கும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

Pfizer, AstraZeneca கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் 6 வாரங்களுக்குப் பின்னர் அதன் வீரியம் குறையும் என்றும், 10 வாரங்களில் அதன் எதிர்ப்பு சக்தி 50 சதவீதமாக குறையும் என்றும் லேன்சட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வு முடிவில் முக்கியத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பூசியின் வீரியம் குறையத் தொடங்கினால், புதிய கொரொனா வகைகளுக்கு எதிராக அது செயல்படும் திறனும் கண்டிப்பாக குறையும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த வீரியம் குறைவானது எந்த அளவு இருக்கும் என்பது குறித்து தெளிவான ஆய்வுத் தகவல்கள் இல்லை.

seithichurul

Trending

Exit mobile version