தமிழ்நாடு

தடுப்பூசி போட்டால்தான் அரசின் உதவிகள்: அதிரடி அறிவிப்பு

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியும் செலுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இன்னும் கோடிக்கணக்கானோர் முதல் டோஸ் தடுப்பூசியே செலுத்தாமல் உள்ளனர். அவர்களும் விரைவில் தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் தடுப்பூசி போட்டால் தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கூறியபோது தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் தான் கல்வி நிலையங்களில் சேரலாம் என்ற நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அரசின் நலத்திட்டங்கள் தடுப்பூசி போட்டால் தான் கிடைக்கும் நிலை உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி போட்டால் தான் அரசின் சலுகைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதுவையிலும் அதே போன்ற ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற ஒரு அறிவிப்பு தமிழகத்திலும் வெளியானால் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version